சுவாதி யார் என்றே தெரியாது: ராம்குமார்

Report Print Fathima Fathima in இந்தியா
சுவாதி யார் என்றே தெரியாது: ராம்குமார்
1691Shares

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கொலையாளியை அடையாளம் காண்பிப்பதற்காக அடையாள அணிவகுப்பு நேற்று புழல் சிறையில் நடந்தது.

நீதிபதி சங்கர் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில் ராம்குமார் போன்று தோற்றம் கொண்டவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர்.

இவர்களில் கொலையாளியை சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், மற்றும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெட்டி கடை நடத்தும் சிவகுமார் அடையாளம் காட்டினார்.

இந்த அணிவகுப்புக்கு ராம்குமார் ஒத்துழைப்பு அளித்ததாகவும், விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் எனவும் நீதிபதி சங்கர் தெரிவித்தார்.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் மார்க்ஸ் ரவீந்திரன், மனோகரன், மரிய ஜான்சன் உட்பட 8 பேர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் கூறுகையில், நேற்று மாலை சுமார் ½ மணிநேரம் ராம்குமாரை சந்தித்து பேசினோம்.

அப்போது, எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சுவாதியுடன் நான் பழகவில்லை. சுவாதி யார் என்றே எனக்கு தெரியாது என ராம்குமார் தெரிவித்தார்.

மேலும், வீட்டின் இருட்டு அறையில் இருந்தபோது என்னை சிலர் பிடித்து கழுத்தை அறுத்தனர்.

அவர்கள் யார் என்று கூட என்னால் பார்க்கமுடியவில்லை, பேசமுடியாத நிலையில் இருந்த போது என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கியதுடன் கையெழுத்தும் வாங்கி கொண்டனர் என்று தெரிவித்தாக கூறியுள்ளார்.

மேலும் ராம்குமார் நிரபராதி என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் நிறைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments