பாலாற்று நீரை பருகி 3400 வாத்துகள் பலி: மக்களின் கதி என்ன?

Report Print Basu in இந்தியா
345Shares

ஆம்பூர் அருகே பாலாற்றில் வெளியேற்றப்படும் தோல் கழிவுநீரை குடித்து 3400ற்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாலாற்றங்கரைகளில் வாத்து வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பாலாற்றில் வெளியேற்றப்பட்ட தோல்கழிவுநீரை பருகிய வாத்துகள் திடீரென உயிரிழந்துள்ளன. இதுவரை 3,420 வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வாத்துகளை அதன் உரிமையாளர் பாலாற்றிலேயே புதைத்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பாலாற்றின் அருகில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, சுமார் 3 ஆயிரம் வாத்துக்கள் இந்த நீரை பருகி இறந்துள்ளன. இதற்கு முன்னர் பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதனால் இங்கு மட்டும் அல்ல, ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் சில தோல் தொழிற்சாலைகளில் இருந்து பைப் லைன்களே அமைத்து கழிவுநீரை அப்பட்டமாக வெளியேற்றுகின்றனர்.

கழிவுநீரை குடித்த வாத்துக்களுக்கு இந்த கதி என்றால் பாலாற்று குடிநீரை பயன்படுத்தும் மக்களின் கதி என்ன? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments