ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பரிதாப மரணம்

Report Print Fathima Fathima in இந்தியா

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் 35 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை தவறி விழுந்துள்ளது.

தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்றது.

குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments