மரக்கிளையில் தொங்கிய குழந்தை சடலம்

Report Print Fathima Fathima in இந்தியா

கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை அருகே கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் ஆற்றங்கரையில் உள்ள மரக்கிளையில் குழந்தை சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.

ஆற்றில் குளிப்பதற்காக வந்த மக்கள் குழந்தை மரக்கிளையில் தொங்குவதைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளானர்.

விரைந்து வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், குழந்தை யாருடையது? எதற்காக வீசிவிட்டு சென்றுள்ளனர்? குழந்தையை உயிருடன் வீசினார்களா? அல்லது இற்ந்த பின் வீசினார்களா? இல்லை கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? அதனால் தான் வீசிவிட்டு சென்றனரா? என்பது தெரியவில்லை. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments