பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கனவு ஒருபோதும் நிறைவேறாது!

Report Print Basu in இந்தியா

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பாகிஸ்தான் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

தீவீரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் மாநிலம், பாகிஸ்தானுடன் இணையும் நாளுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காஷ்மீர் முதல்வர் மெகபூபா கூறியதாவது, நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ள கருத்து ஒருநாளும் நிறைவேறாது, மாறாக இருநாடுகளுக்கும் இடையே மேலும் பிரச்சனை ஏற்படவே வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக மெகபூபா முக்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது, காஷ்மீர் மக்களுக்கு இருக்கும் மனக்குறைகளை தீர்க்க எவருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments