சல்மான்கான் தான் மானை சுட்டார்: ஓட்டுனர் பரபரப்பான தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

மானை வேட்டையாடிய வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சல்மான்கான் தான் மானை சுட்டார் என அவரது ஓட்டுநர் தற்போது பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 1988ம் ஆண்டு அரியவகை மானை வேட்டையாடியதாக நடிகர் சல்மான்கான் மீது ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 2006 ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சல்மான்கான்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் சல்மான்கான் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தது.

இந்நிலையில் சல்மான்கான் ஓட்டுனர் ஹரிஷ் துலானி கூறியதாவது, சல்மான்கான் தான் காரை விட்டு கீழே இறங்கி மானை சுட்டார்.

மேலும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் நான் மாஜிஸ்திரேட்டிடம் என்ன வாக்குமூலம் அளித்தேனோ அதில் நான் உறுதியாக உள்ளேன்.

இதனால் எனக்கும், எனது தந்தைக்கும் பல மிரட்டல்கள் வந்ததால், ஜோத்பூரில் உள்ள எனது உறவினர் வீட்டில் வசித்து வந்தேன்.

மேலும் பொலிசாரிடம் பாதுகாப்பு கோரினேன், ஆனால் அவர்கள் எனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.

பொலிசார் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் தான் நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை கூறியிருப்பேன் என கூறியுள்ளார்.

சல்மான்கான் ஓட்டுனர் ஹரிஷ் துலானி கடந்த 2002 ம் ஆண்டு தலைமறைவாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்சிகள் இல்லாத காரணத்தினால் விடுதலை செய்யப்பட்ட சல்மான்கானுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments