சினிமா பாணியில் நடந்த நிஜக்கதை!

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் ஆறு மாதமாக கோமாவில் இருந்த நபருக்கு நினைவு திரும்பியதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளவிட்ட நண்பர்களை அடையாளம் காட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் நல்லவனம்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன்(23), இவரது நண்பர்கள் வெங்கடேசன்(39), சம்பந்தம்(24).

இவர்கள் மூன்று பேரும் சென்னையில் ஹொட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி மூன்று பேரும் வேலை முடித்துவிட்டு சென்ட்ரலில் இருந்து ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வில்லிவாக்கம்- கொரட்டூருக்கு இடையே ரயில் சென்ற போது பூபாலன் தவறி கீழே விழுந்தார், உடனடியாக ரயிலை நிறுத்திய பயணிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தலையில் பலத்த காயமடைந்ததால் பூபாலன் கோமா நிலைக்கு சென்றார்.

இந்நிலையில் மூவரும் குடிபோதையில் இருந்ததால் எதிர்பாராத விபத்து என கூறி வழக்கை பொலிசார் முடித்தனர்.

இதற்கிடையே கடந்த ஆறு மாதமாக கோமாவில் இருந்த பூபாலனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் நினைவு திரும்பியது.

பெற்றோர்களிடம், சம்மந்தம் மற்றும் வெங்கடேசன் இருவரும் தன்னை ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த பொலிசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இருவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments