நடுரோட்டில் இளைஞரை அடித்து உதைத்த பெண்! வைரல் வீடியோ

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவில் இளம்பெண்ணை கற்பழித்து ஏமாற்றிய இளைஞனை அடித்து உதைத்த சம்பவம் புனேயில் நடந்துள்ளது.

புனே மாநிலம் சிக்ராபூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் லோண்டே(25), அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கற்பழித்து விட்டார்.

இதில் அந்த பெண் கர்ப்பமானார், இதனை அறிந்து கொண்ட ஸ்ரீகாந்த், மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்து விட்டார்.

மேலும் அப்பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார், ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், பூமாதா பெண்கள் அமைப்பின் தலைவி திருப்தி தேசாயிடம் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.

திருப்தி தேசாய் ஸ்ரீகாந்தை தொடர்பு கொண்டு பேசிய போது, தன்னால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திருப்தி தேசாய், அவரை சிராக்பூரில் உள்ள பொது இடத்திற்கு வருமாறு அழைத்தார்.

குறித்த இடத்திற்கு பெண்களுடன் சென்ற திருப்தி தேசாய், ஸ்ரீகாந்தை அடித்து உதைத்து பொலிசில் ஒப்படைத்துள்ளார்.

சிராக்பூர் காவல் நிலையத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததையடுத்து, அவர் மீது மூன்று விதமான மோசடி வழக்கில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments