கபாலி பட பேனர்கள் அகற்றம்! போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் பிரம்மாண்டமாக ரஜினியின் கபாலி பட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்த பிரம்மாண்ட பேனர்கள், அவ்வழியே செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருந்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பேனர்களை எல்லாம் அகற்றும் படி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொறுமை இழந்த டிராபிக் ராமசாமி சம்பந்தபட்ட திரையரங்கு சென்று பேனர்களை எல்லாம் கிழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதை கண்ட ரஜினி ரசிகர்கள் டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த ரஜினியின் பிரம்மாண்ட கபாலி பட பேனர்களை எல்லாம் அகற்றினர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments