மீண்டும் பொலிஸ் காவலில் ராம்குமார்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் 24ம் திகதி படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவரை கைது செய்த பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர்.

ராம்குமார் குற்றவாளி அல்ல, பொலிசார் உண்மையை மூடிமறைக்கின்றனர் என ராம்குமாரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே ராம்குமாரை மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மீண்டும் ஒருநாள் ராம்குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் பொலிஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 8ம் திகதி காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் ராம்குமார் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு பார்க்கவும், அவரது கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments