நடுவானில் கலவரம் செய்தது தீவிரவாதியா? அவசரமாக தரையிறக்கம்

Report Print Fathima Fathima in இந்தியா

துபாயிலிருந்து வந்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி கலவரம் செய்ததால் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு இண்டிகோ என்ற விமானம் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை விமானம் இந்தியாவை நெருங்கிய போது விமான பயணி ஒருவர் திடீரென்று கூச்சல் போட ஆரம்பித்தார். சக பயணிகள் சமாதானம் செய்ய முற்பட்ட போது அவர்களுடன் அந்த பயணி சண்டையிட்டுள்ளார்.

இதனால் விமானி அருகிலிருந்த மும்பை விமான நிலைய தரைகட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்ட பின்னர் விமானம் காலை 09.15 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து, விமான ஊழியர்கள் கலவரம் செய்த பயணியை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு விமானம் 10.50 மணிக்கு கோழிக்கோட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

மேலும், விமானத்தில் கலவரம் செய்த பயணி ஐஎஸ் தீவிரவாத அமைப்பிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதாக தகவல் வெளியாகியது, ஆனால் இதை சக பயணிகள் மறுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments