மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவருக்கு ஆயுள் தண்டனை

Report Print Kalam Kalam in இந்தியா

தான் காதலித்து மணம்புரிந்து கொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு உயிருடன் எரித்துக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அளுக்குளிபாசியூரை சேர்ந்த தெய்வக்குமார்(35) என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் கடை நடத்தி வருகிறார்.

இவர் ஈஸ்வரி என்ற பெண்ணை 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமனம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தெய்வக்குமார் தனது மனைவி நடத்தையில் அதிகமாக சந்தேகப்பட ஆரம்பித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி ஈஸ்வரி தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது, எங்கே சென்றாய் என சந்தேகப்பட்டு மனைவியை திட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மிகவும் ஆத்திரமடைந்த தெய்வக்குமார் அருகிலிருந்த மண்ணெண்ணெயை ஈஸ்வரி மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் கருகிபோய் ஈஸ்வரி கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈஸ்வரி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக கோபி பொலிசார் வழக்கு பதிந்து தெய்வகுமாரை கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கிலாக சுமதி வாதாடியுள்ளார்.

இதில், தெய்வக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், அபராதம் கட்டுவதற்கு தவறினால் ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments