மணமுடித்த 14 வயது சிறுமியை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கணவர்!

Report Print Arbin Arbin in இந்தியா

உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமியை மணமுடித்த கணவரே ரூ.50 ஆயிரத்துக்கு விற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பனாரஸ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி டெல்லியில் உள்ள அனாதை இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்த உறவினர் ஒருவர் சிறுமிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை டெல்லியிலிருந்து மும்பைக்கு அழைந்து வந்த கணவர் ரூ.50 ஆயிரத்துக்கு வீட்டு வேலை செய்யும் பணியாளராக பெண் ஒருவரிடம் விற்றுவிட்டார்.

இதுதொடர்பாக அந்த சிறுமி மும்பை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். தன்னை வாங்கிய பெண் மும்பையில் மாலாட் பகுதியில் வசிப்பதாகவும், அங்கு வசிப்பவர்கள் அறிவுரைப்படி பொலிசில் புகார் அளித்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் சம்மந்தப்பட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். திருமணம் செய்த நபரும், விலைக்கு வாங்கிய பெண்ணும் தன்னை கடுமையாக தாக்கியதாக விசாரணையின் போது சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதில் அந்த சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments