15 ரூபாய் விவகாரத்தில் தம்பதி படுகொலை: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

உத்தரபிரதேச மாநிலத்தில் மது அருந்த பணம் தராத தம்பதியை நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் குற்ரா என்ற பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் வித்தைகாட்டி பிழைப்பை நடத்தி வந்துள்ளனர் பரத் நாட் மற்றும் அவரது மனைவி மமதா ஆகியோர்.

அப்போது அந்த பாதையில் வந்த அசோக் மிஸ்ரா என்பவர் இந்த தம்பதியிடம் மது அருந்த வேண்டும் இருக்கும் பணம் போதவில்லை 15 ரூபாய் தர வேண்டும் என கேட்டு நிர்பந்தித்துள்ளார்.

இதற்கு அந்த தம்பதி மறுப்பு தெரிவிக்கவே அசோக் மிஸ்ராவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மிஸ்ரா தனது கைவசம் இருந்த அரிவாளால் அந்த தம்பதிகளை வெட்டி சாய்த்துள்ளார். இதில் ரத்த காயத்தில் சாந்த அந்த கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் உடனடியாக அந்த உடல்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைடையே கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற மிஸ்ராவை அவருக்கு சொந்தமான மளிகை கடையில் இருந்து பொலிசார் மடக்கிப்பிடித்துள்ளனர்.

நாட் இனத்தவர்கள் நாடோடி சமூகத்தினர். இவர்களின் வருவாய் என்பது சாலைகளின் ஓரங்களில் வித்தை காட்டி அதனால் கிட்டும் சொற்ப வருவாயில் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

மட்டுமின்றி கயிறு கட்டி நடத்தப்படும் வித்தைகளில் போதிய வருவாய் எதுவும் இல்லை என்பதால் பெரும்பாலான நாட் சமூகத்தினர் இவர்களுக்கு பரிச்சயம் அற்ற விவசாயத்தில் தற்போது கூலி வேலை செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments