காட்டுக்குள் கபடி ஆடும் வாழ்க்கை! மிரள வைக்கும் பாசமலர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சத்திஷ்கர் மாநிலத்தில் சகோதர, சகோதரி ஆகிய இருவர் காட்டுக்குள் சென்று அதிக நேரம் செலவிடுவதை விரும்புவதோடு மட்டுமல்லாமல், அங்கிருக்கும் விலங்குகளோடு விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சத்திஷ்கர் மாநிலம் Rajnandgaon நகரில் வசித்து வரும் Pancho Ba(45) என்பவருக்கு 5 குழந்தைகள், இவர்களில் கடைசி இரண்டு குழந்தைகளான சுரேந்திர குமார் மற்றும் அவரது சகோதரி ராஜேஸ்வரி(25) ஆகிய இருவரும், விலங்குகளுக்கு அடிமையாகியுள்ளார்கள்.

வீட்டில் இருப்பதை விட காட்டுக்குள் சென்று அங்கிருக்கும் விலங்குகளுடன் இவர்கள் விளையாடுவார்கள், அதுவும் இளைய மகன் சுரேந்திரன், குரங்குகளுடன் கபடி விளையாடுவான் என்று கூறி வருத்தப்பட்ட தாய், என்னுடைய இரு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அச்சமாக உள்ளது என கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, எனது கணவரை நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டனர், துப்புரவு தொழில் செய்து என் குழந்தைகளை வளர்த்து வருகிறேன், எனது மற்ற இரண்டு குழந்தைகளை விட இவர்கள் இருவரும் பழக்கவழக்கத்தில் சற்று மாறுபட்டவர்கள், சுரேந்திரனின் நடைமுறைகள் அனைத்தும் குரங்கின் நடைமுறைகள் போன்று இருக்கும்.

மேலும், அவன் நடப்பது கொரில்லா நடப்பது போன்று இருக்கிறது என எல்லோரும் கிண்டல் செய்வார்கள், காட்டுக்குள் செல்லும் இவர்கள், விலங்குகளை தொட்டுப்பார்ப்பதற்கு கூட அச்சப்படமாட்டார்கள், அந்த அளவுக்கு விலங்குகளுடன் நெருக்கமாக இருப்பார்கள்.

இவர்கள் இருவரும் பிறந்தபோது, நன்றாக பேசி விளையாடினார்கள், ஆனால் காட்டுக்குள் சென்றபிறகுதான் இவர்களது நடைமுறைகள் மாற ஆரம்பித்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இவர்களது குடும்பத்தினருக்கு இறந்துபோன கணவரின் சகோதரர் ஹரிஸ்(40) என்பவர் உதவி செய்து வருகிறார், அவர்கள் சாப்பிடுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மாதம் ரூ.3.000 தொகையை கொடுத்து வருகிறார்.

காட்டுக்குள் சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கும் இவர்களது, நடைமுறை சற்று வித்தியாசமானதாக இருக்கிறது என்று ஹரிஸ், இவர்கள் இருவரையும் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார், ஆனால் மருத்துவர்களும் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என கைவிரித்துவிட்டனர் என கூறியுள்ளார்.

அரசு தலைமை மருத்துவ அதிகாரி Dr Mithlesh Chaudhari (52) கூறியதாவது, இவர்கள் இருவருக்கும் மூளையானது முழுமையாக வளர்ச்சியடையவில்லை, ஆனால் அவர்களுக்கு தெரியும் தாங்கள் காட்டுக்குள் வாழ்கிறோம் என்று, இதுவரை எந்த தீங்கினையும் சந்தித்திராத இவர்களின் நிலை குறித்து சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments