சென்னைக்கு மீண்டும் பேராபத்து?

Report Print Basu in இந்தியா
சென்னைக்கு மீண்டும் பேராபத்து?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் , சென்னை மீண்டும் வெள்ளம் தாக்கும் அபாயம் இருப்பதாக அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்கத்தினர், சென்னயைில் உள்ள வில்லிவாக்கம், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் அறப்போர் இயக்கத்தின் தலைவர் சந்திரமோகன் கூறியதாவது, இன்னும் மழை காலத்திற்கு இரண்டு மாதங்கள் தான் உள்ளது, இப்பொழுது பொழியும் மழைக்கே அங்கங்கே தண்ணீர் தேங்குகிறது.

இது எல் நினோ ஆண்டு, இன்னும் மழை அதிகமாக பொழிய போகிறது, இன்னும் தண்ணீர் அதிகமாக வர போகிறது.

இதை சமாளிக்க நாம தயாராக இருக்கின்றோமா என்றால் சத்தியமாக இல்லை. இன்னும் 5,000 ரூபாய் வாங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

மக்களின் வீடு மற்றும் பொருட்கள் அனைத்தும் மீண்டும் தண்ணீரில் முழ்க போகிறது.

அந்த அளவிற்கு அரசாங்கம் மிக அலட்சியமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசை கண்டித்து போரட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments