”தெய்வத்திற்கு அடிமை”! ஸ்டாலினுக்கு அமைச்சரின் பதில்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது அதிமுக எம்எல்ஏ வயக்காட்டு பொம்மைகள் என்று கூறியதும், அதற்கு பதிலடியாக ஸ்டாலின் கொத்தடிமைகள் என்று பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ளார் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி.

அவர் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எங்களை அடிமைகள் என்றார். ஏற்றுக் கொள்கிறோம். அன்புக்கு அடிமை முதல்வர் ஜெயலலிதா ஒரு தெய்வம், அந்த தெய்வத்திற்கு அடிமையாக இருக்கிறோம்.

அவரது அன்பிற்கு அடிமை, அவரது பாசத்திற்கு அடிமை, 'அம்மா' என்ற சொல்லுக்கு அடிமை. அவரது ஆணையை ஏற்று செய்து முடிக்க, ஒன்றரை கோடி தொண்டர்களும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments