மனைவியை கொலை செய்து கள்ளக்காதலியுடன் உல்லாசம்! திடுக்கிடும் தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

டெல்லியில் மனைவியை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலியுடன் உல்லாசமாக பொழுதை கழித்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியின் ஷாகார்பூர் பகுதியை சேர்ந்த தம்பதி பைரோஸ்- ஹாலிம், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பைரோசுக்கு, பூஜா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இதனை அறிந்து கொண்ட ஹாலிம் அவரின் வீட்டுக்கு சென்று சண்டையிட்டுள்ளார்.

தகராறு முற்றிப் போகவே, பைரோஸ் மற்றும் பூஜா சேர்ந்து ஹாலிமை கொலை செய்துள்ளனர்.

யாருக்கும் தெரியாமல் அவரது உடலை மறைத்ததுடன் கட்டிலில் போட்டு அதன் மீது பெட்டை வைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசவே, ஹாலிமை சாக்கு பையில் போட்டு தெருவில் வீசி எறிந்துள்ளனர்.

சாக்கு பையிலிருந்து இருந்து அழுகிய நாற்றம் வந்தவுடன், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பொலிசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் சாக்கு பையை பார்த்தபோது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஹாலிம் என்பதும், கணவரே கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments