சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Fathima Fathima in இந்தியா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி-க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த சசிகலா புஷ்பா எம்.பி, தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.பாதக், டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து தினமும் நாடாளுமன்றம் சென்று வர சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் பாதுகாப்பு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி, டெல்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா மீது மோசடி புகார்

ராஜ்யசபா எம்பி-யான சசிகலா புஷ்பா மீது ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சாந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் காவல் ஆணையர் சிவஞானத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்ட் பெற்று தருவதாக கூறி அவரை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விடுவது தொடர்பான ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக கடந்த 2015ம் ஆண்டு சசிகலா புஷ்பாவிடம் ரூ.20 லட்சம் கொடுத்ததாகவும், அவர் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணத்தை திருப்பி கேட்டால் சசிகலாவும், அவரது கணவரும் ஒருமையில் பேசி அசிங்கப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments