இலங்கை கடற்படையின் உபசரிப்பு! தமிழக மீனவர்கள் நெகிழ்ச்சி

Report Print Jubilee Jubilee in இந்தியா

நடுக்கடலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்களை மீட்டு அவர்களுக்கு உணவளித்து, அவர்கள் பத்திரமாக தமிழகம் திரும்ப உதவிய இலங்கை கடற்படையின் செயல் தமிழக மீனவர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் இருந்து விசைப்படகில் சென்ற 4 மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகு திடீரென பழுதடைந்து அவர்கள் நடுக்கடலில் தத்தளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் திக்குமுக்காடி தவித்த தமிழக மீனவர்களை மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், அங்கு தமிழக மீனவர்களுக்கு உணவளித்த அவர்கள், பழுதான படகினை சரி செய்து அவர்களை தமிழகத்திற்கு திரும்ப அனுப்பியுள்ளனர்.

இதுவரை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், சிறைபிடிப்பதும் போன்றவற்றையே இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் தற்போது முதன்முறையாக அவர்கள் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டது தமிழக மீனவர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments