ஜெயலலிதா இதை அப்போதே செய்யாதது ஏன்? திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

Report Print Jubilee Jubilee in இந்தியா

மதுவிலக்குப் பிரச்சனையில் உண்மையாக அக்கறையுள்ள அரசு எது என்பதும், அக்கறையுள்ளவர்கள் யார் என்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்றையதினம், சட்டப் பேரவையில், சில கருத்துகளைப் பதிவு செய்வது தனது கடமை என்று கூறிக் கொண்டு, தமிழகத்தில் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுவிலக்கு என்னால்தான் ரத்து செய்யப்பட்டது என்றும், 2007ஆம் ஆண்டில் பேரவையில் நான் கூறிய கருத்து ஒன்றையும் குறிப்பிட்டதோடு, மதுவிலக்கில் உண்மையான அக்கறை கொண்டுள்ளது அவருடைய தலைமையிலான அரசுதான் என்று தெரிவித்திருக்கிறார்.

1971ஆம் ஆண்டைப் பற்றியும், 2007ஆம் ஆண்டைப் பற்றியும் நினைவுகூர்ந்த ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு 21-7-2015 அன்று “திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று நான் அறிவித்தது எப்படித்தான் ஞாபகத்திற்கு வராமல் போயிற்றோ?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10-8-2015 அன்று மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடத்தப்பட்டதே, அதுவும் ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை.

மதுவிலக்குப் பிரச்சினையிலே உண்மையான அக்கறையுள்ள அரசு எது என்பதும், அக்கறையுள்ளவர்கள் யார் என்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

உண்மையிலேயே அக்கறை உள்ளவராக ஜெயலலிதா இருந்தால், ஐந்தாண்டு காலமாக ஆட்சியிலே இருந்த போது படிப்படியாக தமிழகத்திலே மதுவிலக்கை நடை முறைப்படுத்தியிருக்க மாட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments