சென்னை மதுபான விடுதிகளில் சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமை

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் மது விநியோகம் செய்யவும், நடனமாடவும் சிறுமிகளை உட்படுத்துவது தெரியவந்துள்ளது.

போதை தலைக்கேறிய ஆசாமிகள் சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

"கண்கவர் நடனம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்", மதுப்பிரியர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக சென்னையில் உள்ள மதுபான விடுதிகள் அறிமுகப்படுத்தியுள்ள யுக்தி இது.

மதுபான விடுதிகளில் நடனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், பொலிசாரின் ஒத்துழைப்புடன் இதுபோன்ற தவறுகள் நடந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் எந்தெந்த இடங்களில் உள்ள மதுபான விடுதிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகின்றன என்பதையும் அவர்கள் பட்டியலிட தவறவில்லை.

வட இந்தியாவில் உள்ள பழக்கத்தை சென்னையில் பின்பற்றி வருவதாகவும், 16 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது, இந்த பழக்கவழக்கத்தால் அச்சிறுமிகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கலாசாரமும் பாதிக்கப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுபான விடுதியில் பணியாற்றிய பெண்ணை, அங்கு சென்ற வாடிக்கையாளர் ஹமீத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் மயக்கமடைந்த அப்பெண் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்குற்றத்திற்காக அந்த வாடிக்கையாளரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, அவையெல்லாம் மூடி மறைக்கப்படுகின்றன என குழந்தைகள் நல ஆர்வலர் சேவியர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments