ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 1 கோடி: இந்திய ரயில்வே அறிவிப்பு

Report Print Jubilee Jubilee in இந்தியா

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

31 வது ரியோ ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இன்று தொடங்குகிறது.

இந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரெயில்வே துறையைச் சேர்ந்த 35 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி வழங்கப்படும், அவர்களுக்கு பணி உயர்வும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதன்படி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட உள்ளன.

இதுதவிர முதல் 8 இடங்களுக்குள் வரும் வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments