பாலியல் சித்ரவதை, 7 கொலைகள்: விரைவில் கைதாகும் சசிகலா புஷ்பா?

Report Print Jubilee Jubilee in இந்தியா

அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா மீது பல புகார்கள் குவிந்து வருவதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

திமுக எம்.பி திருச்சி சிவாவை தாக்கிய விவகாரத்தில் எம்.பி சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா மீது சசிகலா புஷ்பா ராஜ்யசபாவிலே பகிரங்கமாக புகார் கூறினார். இதனையடுத்து சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத்தினர் மீது சரமாரியாக புகார்கள் கிளம்பி வருகின்றன.

முதலில் அவரது கணவர் மீது பண மோசடி புகார் எழுந்தது. தற்போது அவரது கணவர் மற்றும் மகன் மீது இன்று அவர்களது வீட்டில் வேலை பார்த்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் கூறியுள்ள இந்தப் புகாரில் சசிகலா புஷ்பா தன்னை அடித்து உதைத்ததாகவும், அவரது கணவரும், மகனும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பானுமதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் டிரைவர் ஆகியோர் சேர்ந்து 7 கொலைகள் செய்திருப்பதாகவும், பானுமதி உட்பட பல பெண்களை இவர்கள் பலாத்காரம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவிர, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரும் அடிபடுவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த பாலியல் புகாரோடு சேர்த்து இதுவரை சசிகலா புஷ்பா மீது நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments