விவாகரத்திற்கு காரணம் தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Report Print Fathima Fathima in இந்தியா

திருமணமாகி விருப்பம் இல்லாமல் பிரிபவர்களிடம் காரணம் கேட்க முடியது, அது நீதிமன்றத்தின் வேலை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ம் ஆண்டில் நெல்லையை சேர்ந்த தம்பதிகள் திருமணம் செய்துள்ளனர். பின்னர் தவிர்க்க முடியாத கரணத்தினால் 2014 ஆம் ஆண்டு பிரிந்து வாழ்ந்துள்ளதால், 2015 ம் ஆண்டு விவாகரத்து செய்து கொள்வதற்காக நெல்லை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

மனுவை விசாரித்த நீதிபதி இருவரும் பிரிவதற்கான காரணங்கள் தெரிவிக்காததால் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து தம்பதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், கோகுல் ராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருமணம் முடிந்து அவர்கள் சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்றால், அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இருவரும் சேர்ந்து வாழ வழியில்லை எனும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு அமைதியான முறையில் விவாகரத்து வழங்க வேண்டும்.

மேலும் அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்குவதற்கு முன்னரே ஒராண்டுகாலம் தனியாக வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் பிரிவதற்கான காரணம் கூறினால் மட்டுமே விவாகரத்து வழங்க முடியும் என்று கூறி அவர்கள் மனுவை தள்ளுபடி செய்வது சரியல்ல, அதற்கான காரணம் கேட்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments