மநகூ தலைவர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்!

Report Print Deepthi Deepthi in இந்தியா

மநகூ தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க ஒப்புதல் கோரியதில் நீண்ட காலமாக அலைக்கழிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜயகாந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து மநகூ போட்டியிட்டது. இதில் படு தோல்வியை தழுவியது.

இந்நிலையில், தேமுதிகவில் இருந்த முக்கிய புள்ளிகள் சிலர், கட்சியை விட்டு திமுக மற்றும் அதிமுக என தாவிக் கொண்டனர்.

இதற்கிடையில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை பற்றி கலந்தாலோசிக்க மநகூ தலைவர்கள் விஜயகாந்தை சந்திக்க வேண்டுமென கால ஒப்புதல் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இதற்கான எந்த அறிவிப்பும் அளிக்காமல் இருந்த விஜயகாந்த் தற்போது தனது பிறந்த நாளான 25 ம் திகதிக்கு பின்னர் சந்திக்கலாம் என ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments