சென்னை விமான நிலையத்தில் லிஃப்ட் மேடை சரிந்து விபத்து - பயணிகள் அச்சம்

Report Print Tamilini in இந்தியா

சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக விபத்து நடந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

2012ம் ஆண்டு சென்னை விமான நிலையம் ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நவீனமயமாக்கல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தி வந்தன.

இந்நிலையில், உள்நாட்டு விமான நிலைய வருகைப்பகுதியில் உள்ள லிஃப்ட் மேடை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து வழக்கம் போல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவது பயணிகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments