சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது! சபாநாயகர் திட்டவட்டம்

Report Print Basu in இந்தியா
66Shares

தமிழக சட்டசபையிலிருந்து திமுக எம்எல்ஏ-க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதானமானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன், நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையைபிடிக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுக எம்எல்ஏ-க்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சபாநாயகர் நீக்க மறுத்ததால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திமுக எம்எல்ஏ-க்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை திமுக எம்எல்ஏ-க்கள் தங்களை தங்கள் கட்சியின் அறைக்குச் செல்ல அனுமதிக்குமாறு காவலர்களுடன்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவை நடவடிக்கையில் ஈடுபடாமல் தங்களுக்கான அறைக்கு செல்ல அனுமதிக்குமாறும் கேட்டனர்.

காவலர்கள் மறுத்ததை அடுத்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சட்டசபை வளாகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ-க்களுக்கு விதிக்கப்பட்ட ஒருவாரம் சஸ்பெண்ட உத்தரவை ஒருபோதும் மறுபரிசீலனை செய்ய முடியாது என சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments