"நரகம் அல்ல நாடு": கருத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை ரம்யா

Report Print Deepthi Deepthi in இந்தியா
457Shares
457Shares
ibctamil.com

பாகிஸ்தான் நாடு "நரகம் அல்ல அது நல்ல நாடு" என நடிகையும், காங்கிரஸ் எம்பியுமான ரம்யா கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர், பாகிஸ்தான் நாடு ஒரு நரகம் என கூறியிருந்தார், இந்நிலையில் அங்கு சுற்றுலா சென்ற ரம்யா, அந்நாட்டை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் நம்மை போலவே உள்ளனர், மத்திய மந்திரி அந்நாட்டு நரகம் என கூறியிருந்தார், ஆனால் அது நரகம் கிடையாது நல்ல நாடு என கூறியுள்ளார்.

இந்நிலையில், இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதாவை சேர்ந்த பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் நடிகை ரம்யா ஆகியோர் பாகிஸ்தானுக்கு போய் குடியேறட்டும்.

நம்முடைய எதிரி நாட்டை நடிகை ரம்யா புகழ்ந்து பேசுவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், பெங்களூருவில் 48 மணி நேர தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினரும் ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். ரம்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments