காவல் அதிகாரி வயிற்றில் 40 கத்திகள்: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா
228Shares
228Shares
ibctamil.com

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் காவல் அதிகாரி ஒருவரின் வயிற்றில் இருந்து 40 கத்திகள் அறுவைச் சிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்டது.

வயிற்றில் அசாதாரண வலி இருப்பதாக அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த காவல் அதிகாரிக்கு அங்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது அவரது வயிற்றில் கத்தி போன்ற பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து 28 கத்திகளை வெளியில் எடுத்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் அவருக்கு வயிற்றில் வலி இருக்கவே, மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து பார்த்ததில் மேலும் 12 கத்திகள் அவரது வயிற்றிக்குள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பேசிய மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜதீந்தர் மல்ஹோத்ரா, இதுபோன்றதொரு சம்பவத்தைத் தான் கேள்விப்பட்டதில்லை என்று தெரிவித்தார்.

வயிற்றில் கத்தி இருப்பது குறித்து குறிப்பிட்ட காவல் அதிகாரியிடம் விசாரித்ததில், அவர் கத்தியை விழுங்கியதாகத் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து மருத்துவ குழு விசாரித்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments