சிந்துவின் பயிற்சியாளரை மாற்றுவோம்: தெலுங்கானா துணை முதல்வர் அதிரடி

Report Print Aravinth in இந்தியா
709Shares

வெள்ளி மங்கை சிந்துவின் பயிற்சியாளரை மாற்றப் போவதாக தெலுங்கான துணை முதல்வர் தெரிவித்துள்ளது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய பி.வி. சிந்துவிற்கும், பயிற்சியாளர் கோபிசந்திற்கும் சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இவர்களின் வருகைக்காக அமைச்சர்கள், ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் அவரின் வருகைக்காக காத்திருந்தனர்.

மும்பையில் இருந்து வந்த திறந்தவெளி டபுள்டெக்கர் பேருந்தில், சிந்து கோபிசந்துடன் கச்சிபவுளி மைதானதிற்கு சென்ற பொழுது தெலுங்கானா துணை முதல்வர் மஹ்மூத் அலி சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தார்.

பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய மஹ்மூத் அலி கோபிசந்த் சிறந்த பயிற்சியாளர் தான் ஆனாலும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதற்காக சிந்துவின் பயிற்சியாளரை மாற்றலாம் என நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கோபிசந்த் தான் இந்தியாவின் பேட்மின்டன் சாதனையாளர்கள் சாய்னா நேவால், பிவி சிந்து என பலருக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பதால், துணை முதல்வர் பேசியது அவசியமற்றது என கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments