ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரர்!

Report Print Aravinth in இந்தியா
219Shares
219Shares
lankasrimarket.com

ரயிலில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரர் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மாணவி ஒருவர் கோவை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பதி சென்று தரிசனம் முடித்து விட்டு டெல்லி – திருவனந்தபுரம் ரயிலில் முன்பதிவு பெட்டியில் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், ரயில் ஜோலார் பேட்டை அருகே வந்து கொண்டிருந்த பொழுது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரமோத் என்ற அரியானாவில் ராணுவ வீரராக பணிபுரியும் வாலிபர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் மாணவி கூச்சல் போடவே அப்பெட்டியில் இருந்த அனைவரும் அந்த வாலிபரை பிடித்து டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்பு, ஜோலார்பேட்டை வந்ததும் ரயில்வே பொலிசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் வாலிபர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments