வளர்த்தெடுத்த பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் விஞ்ஞானி

Report Print Santhan in இந்தியா

நாக்பூரில் 2 மாணவிகள் மற்றும் 1 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூர் வார்தா ரோட்டில் பகுதியில் உள்ள அஜ்னி சதுக்கத்தை சேர்ந்தவர் மசூத் அன்சாரி(71). இவருக்கு இரண்டு முறை திருமணம் முடிந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் குழந்தையின்மை காரணமாக, இவர் மூன்று சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இதில் ஒரு மாணவிக்கு 16 வயதும், இரண்டாவது மாணவிக்கு 11 வயதும், மூன்றாவது சிறுமிக்கு 6 வயதும் ஆகிறது.

இந்நிலையில் மசூத் அன்சாரி இம்மூவருக்கும் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக 16 வயது மாணவி, தன் தோழி உதவியுடன் மசூத் அன்சாரி மீது தொண்டு நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பொலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து மசூத் அன்சாரியை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர் இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். மேலும் பெண் குழந்தைகளை தத்தெடுத்ததற்கான ஆதாரமும் அவரிடம் இல்லாததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments