மனிதக்கழிவை சாப்பிட வைத்த மக்கள்: பதற வைக்கும் காரணம்?

Report Print Basu in இந்தியா

ஒடிசாவின் ஜக்தோப்பூர் கிராமத்தை சேர்ந்த மக்கள், இரண்டு மந்திரவாதிகளை அடித்து மனிதக்கழிவை சாப்பிட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம மக்கள் பசுதேப் நாயக் மற்றும் பாஞ்ச்சா நாயத் என்ற இருவரை அடித்து பற்களை உடைத்து மனிதக்கழிவுகளை சாப்பிட வைத்துள்ளனர்.

இருவரும் கிராமத்தில் மந்திரம் செய்து வந்ததாகவும், அவர்களின் மந்திரத்தால் சமீபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் சந்தேகித்த மக்கள் அவர்களை அடித்து மனிதக்கழிவு சாப்பிட வைத்துள்ளனர்.

மக்கள் அடித்ததில் பயந்து போன பாதிக்கப்பட்ட இருவரும் பொலிசிடம் புகார் அளிக்க மறுத்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் கிராமத்திற்கு சென்று விசாரித்த போதும் அவர்கள் பொலிசிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூற பயந்துள்ளனர்.

எனினும், பொலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments