பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த கொடூரம்

Report Print Fathima Fathima in இந்தியா

உத்திரபிரதேசத்தில் குழந்தை ஒன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் சித்தாப்பூர் கிராமத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் குழந்தையை பள்ளம் தோண்டி யாரோ புதைத்துள்ளனர்.

இந்நிலையில் அவ்வழியாக சென்ற மக்கள் திடீரென மணல்மேடு அசைவதை பார்த்துள்ளனர்.

இதனால் பதறிப்போய் மணல் மேட்டை தோண்டி பார்த்த போது, குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார் என பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments