'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு' சூப்பரான பரிசு காத்திருக்கு!!

Report Print Jubilee Jubilee in இந்தியா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையிலும் பரோட்டா சாப்பிடும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் ஏராளமான பரோட்டா பிரியர்கள் இந்தப் போட்டிக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து வருகின்றனர்.

வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடிகர் சூரி பரோட்டா போட்டி ஒன்றில் கலந்து கொள்வார். இந்தக் காட்சி மிகவும் பிரபலமானதால் பல ஹொட்டல்கள் இதே பாணியில் ஹொட்டலை பிரபலப்படுத்தி வருகின்றன.

கடந்த மாதம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அசைவ ஹொட்டல் ஒன்று, 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு' என்ற பெயரில் பரோட்டா சாப்பிடும் போட்டியை அறிவித்தது.

இந்தப் போட்டியில் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர் 42 பரோட்டாக்களை சாப்பிட்டு அனைவரையும் அசர வைத்து பரிசை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் மீண்டும் தற்போது அதேபோன்ற போட்டி ஒன்று கோவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னூர் பகுதியில் கணேசபுரத்தில் உள்ள ஹொட்டல் ஒன்று இந்த பரோட்டா சாப்பிடும் போட்டியை அறிவித்துள்ளது.

அந்த ஹோட்டலில் எதிர்வரும் 5, 6 திகதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த போட்டி நடத்தப்பட்டவுள்ளது.

இந்தப் போட்டியின் ஒரு நபர் 25 பரோட்டாவை சாப்பிட வேண்டும். முடியாவிட்டால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டும். அறிவிப்பு வெளியான 4 நாட்களில் மட்டும் சுமார் 2,000 பேர் போனில் தொடர்புக் கொண்டு விவரம் கேட்டுள்ளனராம்.

இதுதவிர சுமார் 200 பேர் நேரில் வந்து பெயரை முன்பதிவு செய்துள்ளனராம். இந்தப் போட்டி விநாயகர் சதுர்த்து ஸ்பெஷலாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments