10 வயது மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்: அதிர்ச்சி தரும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

உத்திரப்பிரதேசத்தில் 10 வயது மாணவனை, ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக அடித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் உள்ள கோண்டா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பத்து வயது மதிக்கதக்க மாணவன் ஒருவரை கடந்த 31 ஆம் திகதி ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியது, அப்பள்ளியில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

அதில் ஆசிரியர் அச்சிறுவன் சரியான முறையில் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தினால் அடித்ததாக கூறப்படுகிறது. அவர் மாணவன் என்று கூட பாராமல் வகுப்பறையில் பல மாணவர்கள் முன்னிலையில் தலையில் அடிப்பதும், கீழே விழுந்த மாணவனை காலால் உதைப்பதும், வகுப்பறை வெளியில் செல்லும் வரை ஒரு மனிதாபிமானம் இல்லாமல் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளதால், பொலிசார் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments