ஈழத்தமிழர்கள் பணத்தை ஏப்பம் விட்டதா நாம் தமிழர் கட்சி?

Report Print Basu in இந்தியா

நாம் தமிழர் கட்சி நிதிக்காக ஈழத் தமிழர்களிடம் இருந்து பெறப்பட்ட பெருந்தொகையை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவர் கையாடல் செய்துள்ளதாக தமிழச்சி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமீபத்தில் நடைப்பெற்ற தமிழக தேர்தலில் 'நாம் தமிழர் கட்சி' நிதிக்காக ஈழத் தமிழர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட பெருந்தொகையை நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான பாக்கியராசன்.சே என்பவர் கையாடல் செய்து தனது கட்சியை சேர்ந்த சிலருடன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார்.

இச்செய்தி தாய்லாந்தில் இருந்து பணம் கொடுத்த ஈழத் தமிழர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,

"நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்டுங்கள்" என்று வங்கி கணக்கிற்கு பொறுப்பாளியாக இருந்த பாக்கியராசன்.சே விடம் நெருக்கடியை ஏற்படுத்த, பொது ஊடகங்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தவிர்த்து வருகிறார் பாக்கியராசன்.சே. இவர் சீமானை தேவர் சாதியினரிடம் ஓட்டு வங்கிக்காக சரணடைய வைத்த சூதுவாது தெரிந்த 'க(ள்)ள' கட்சி பணியாளர்.

சாதி ஓட்டுக்களாலும் ஈழத் தமிழர்களிடம் நிதி சேகரித்து கட்சி நடத்தி, அரசியலை கைப்பற்றி சமகால அரசியல்வாதிகளுக்கு இணையாக 'அள்ளு'வதற்கு காத்திருக்கும் கூட்டம் என்பதை கண்டுபிடித்த தமிழ்நாட்டு நன்கொடையாளர்களும் பாக்கியராசன்.சேவிடம் கணக்கு கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இனி அரசியலில் பிழைத்து பொறுக்கித் தின்ன கத்திக் கொண்டிருக்கும் சீமான் வந்து, "நிதியாக பெறப்பட்ட பணத்துக்கு கணக்கு காட்ட மாட்டோம்" என்று அறிக்கை விட்டால்தான் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடும். இணைய போராளிகள் இயல்பு நிலைக்கு வரக்கூடும். இல்லாவிட்டால் எப்போதுமே தலைமறைவுதான்! என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments