கலவரப்பகுதிக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

Report Print Arbin Arbin in இந்தியா
105Shares

பெங்களூருவில் கலவரம் நடந்து வருவதால் வன்முறைப் பகுதிகளுக்குப் போவதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகத் தலைநகர் பெங்களூர் உள்பட பல இடங்களில் காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாக பதட்ட நிலை நிலவுகிறது.

பெங்களூர் - மைசூர் சாலையின் ஒரு பகுதி போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்வீச்சுக்குள்ளாகியுள்ளன, தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெங்களூரில் அசாதாரண நிலை நிலவுகிறது. அமெரிக்க குடிமக்கள், போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

வன்முறை ஏற்படலாம் என்று கருதப்படும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments