இந்த நேரத்தில் இது தேவைதானா!

Report Print Deepthi Deepthi in இந்தியா
1010Shares

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவும், தமிழ்நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில், இரு இளைஞர்கள் செய்துள்ள செயல் மக்களை ஆத்திர மூட்டியுள்ளது.

பெங்களூரு சேட்டிலைட் பேருந்து நிலையத்தில் தமிழர்கள் நடத்தும் ஓட்டல்களையும், இந்திராநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்களின் ஓட்டல்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

62 பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன, வன்முறை சம்பவங்கள் கட்டுக்கு அடங்காமல் போனதால் பெங்களூரு நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் வன்முறை அடங்கியபாடில்லை.

இந்நிலையில், கலவரத்தில் எரிந்துகொண்டிருக்கும் பேருந்தின் வாகனத்தின் முன்னே இரு இளைஞர்கள் செல்பி எடுத்துக்கொண்டது வைரலாக பரவி வருகிறது.

பற்றி எரிகின்ற தீயை அணைக்க முயற்சிக்காமல், இந்த நேரத்தில் இது தேவைதானா எனவும் பலரும் கொந்தளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments