ஜெயலலிதாவிற்கு ஊர் பக்கம் வருவதற்கு பயம்: விஜயகாந்த்

Report Print Aravinth in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பர்கூர் பக்கம் வருவதற்கு பயம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்து பேசிய போது அவர் கூறியதாவது, பிற கட்சிகளின் மிரட்டல்கள் உட்பட பல பிரச்சனைகளை தாண்டி தமிழகத்தின் முக்கிய கட்சியாக தேமுதிக இயங்கிவருகிறது.

எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பயமில்லை, ஏனெனில் தேமுதிகவினர் பயம் அறியாதவர்கள்.

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பர்கூர் என்றாலே மனதில் பயம் வருகிறது. இந்த பர்கூர்தான் அவருக்கு வெற்றியையும் தோல்வியையும் கொடுத்த ஊர். அதனால்தான் இந்த ஊர் பக்கம் வருவதற்கு அவர் மிகவும் பயப்படுகிறார்.

தேமுதிகவினை விட்டு பிற கட்சிகளில் இணைந்தவர்கள் பணம், பதவிக்கு ஆசைப்பட்டு அக்கட்சிக்கு சென்றவர்கள். எத்தனை இடையூறுகள் செய்தாலும் தேமுதிகவை யாரும் அழிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments