பிறந்தநாளை கின்னசில் இடம்பெற செய்ய மோடியின் இரண்டாவது முயற்சி

Report Print Aravinth in இந்தியா
104Shares

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 66வது பிறந்த தினத்தை குஜராத்தில் கொண்டாடுகிறார்.

இந்நிலையில், இவரது பிறந்த நாளை கின்னஸ் சாதனை முயற்சிகளுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தனது 66வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

இதைத் தொடர்ந்து, குஜராத் அரசு சார்பில் நவசாரி எனும் இடத்தில் 11,223 மாற்று திறனாளிகளுக்கு, ரூ.7.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிக நல திட்டங்கள் வழங்கியதாக இந்நிகழ்வு கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் ஒரே நேரத்தில் ஆயிரம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்.

இதற்கிடையில், 1000 பேருக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் காது கேட்கும் கருவி வழங்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 10,200 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டு கின்னஸ் சாதனைக்கு அனுப்பட்டது. ஆனால் புகைப்படம், வீடியோ போன்ற உரிய ஆதாரங்கள் இல்லாததால் கின்னஸ் சாதனைக்கு ஏற்றதாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments