காவிரி நதி நீர் எப்படியெல்லாம் வீணாகிறது?

Report Print Santhan in இந்தியா
880Shares

காவிரியிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்படும் நீர் குழாய் இணைப்புகளில் உள்ள ஓட்டைகள் காரணமாக 50 சதவீதம் தண்ணீர் வீணடிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 80 லட்சத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக காவிரி நீரையே அதிகம் நம்பியுள்ளனர். இதில் வீட்டு உபயோகத்திற்கு காவிரி நீரை பெங்களூரு மக்கள் 50 சதவீதம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெங்களூரு மாநாகர மக்கள் 17 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக அதை 29 டிம்சியாக உயர்த்தினர்.

தற்போது காவிரியில் இருந்து பெங்களூருவுக்கு எடுத்து செல்லும் தண்ணீர் குழாய் இணைப்புகளில் ஓட்டைகள் இருப்பதால் அதிக அளவு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது எனவும் நீர்த்தேக்கங்களின் மூலமாகவும் வீணடிக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

இதனால் பெங்களூருவுக்கு தினசரி அனுப்பப்படும் காவிரி நீரில் 1400 மில்லி லிட்டர் தண்ணீரில் 600 மில்லி லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்படுவதாக குடிநீர் வாரிய முன்னாள் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments