விக்னேஷ் தற்கொலைக்கு நான் காரணம் என்றால்? ஜெயலலிதாவை என்ன சொல்வீர்கள்? சீமான் ஆவேசம்

Report Print Santhan in இந்தியா
671Shares

நாம் தமிழர் கட்சி இளைஞர் விக்னேஷ் தற்கொலைக்கு தன்னுடைய மேடைப் பேச்சுக்கள் காரணமில்லை என அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக, காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 15 ஆம் திகதி பேரணி நடத்தப்பட்டது .

இதில் அக்கட்சியை சேர்ந்த மன்னார்குடி இளைஞர் விக்னேஷ் என்பவர் பேரணிக்கு மத்தியில் தீக்குளித்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கு சீமானின் முறுக்கேற்றும் மேடைப்பேச்சுக்களே காரணம் என பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கு வகையில் சீமான், நாங்கள் யரையும் தீக்குளித்து சாக சொல்லைவில்லை எனவும், தீக்குளிப்பு என்பது உணர்ச்சிவசப்பட்டு நிகழ்கின்ற ஒன்று அதற்கு யாரும் யாரையும் குறிப்பிட முடியாது என கூறினார்.

அப்படி தற்கொலைக்கு தன்னுடைய முறுக்கேற்றும் பேச்சுத் தான் காரணம் என்றால் ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட போது 100 தமிழர்கள் தற்கொலை செய்து கொண்டார்களே? அதற்கு ஜெயலலிதாவின் முறுக்கேற்றும் பேச்சுத்தான் காரணமா?

இதை அவரிடம் சென்று கேட்க முடியுமா? என ஆவேசமாக சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments