விக்னேஷ் இறப்பு: ஸ்டாலின் வேதனை

Report Print Raju Raju in இந்தியா
137Shares

தற்கொலை லட்சியத்தை அடைய உதவாது, விக்னேஷின் தீக்குளிப்பே கடைசியானதாக இருக்கட்டும் என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், காவேரியில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 வயதான இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, போராடி பலவற்றை சாதிக்க வேண்டிய அந்த இளைஞன் இந்த தற்கொலை செயலில் ஈடுபட்டது அவர் அடைய வேண்டிய லட்சியத்தை அடையமுடியாமல் செய்து விட்டது.

இது போன்ற தொண்டர்களின் செயலை எந்த ஒரு தலைவரும் விரும்ப மாட்டார்கள்,ஆதரிக்கவும் மாட்டார்கள். அவரின் தியாகத்துக்கு வீர வணக்கம் செலுத்துவது கடமை மற்றும் இதுவே முதலும் கடைசியுமான தீக்குளிப்பாக இருக்கட்டும் என இளைஞர் சமுதாயத்தை கேட்டு கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments