தமிழகத்தை புரட்டிப் போடப்போகும் கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

Report Print Jubilee Jubilee in இந்தியா
130Shares

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் தெளிவாக காணப்பட்ட நிலையில், நேற்று இரவு பல இடங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பலப் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்துள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 2 தினங்களுக்கு வட தமிகத்தில் ஓரிரு பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments