நிர்வாண காட்சி வெளியான சர்ச்சை: நடிகை ராதிகா ஆப்தே என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Jubilee Jubilee in இந்தியா
1756Shares

பார்ச்டு படத்தின் நிர்வாண காட்சிகள் வெளியானதில் தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ராதிகா ஆப்தே, இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் பார்ச்டு என்ற இந்திப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லீனா யாதவ் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் அவர் அதுல் ஹூசைனுடன் தோன்றும் நிர்வாணக் காட்சிகள் இணைய தளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இது தொடர்பாக நடிகை ராதிகா ஆப்தே கூறுகையில், வெளியான காட்சிகள் முன்கூட்டியே கசிந்த காட்சிகள் அல்ல, இந்தப் படம் ஏற்கனவே வெளிநாடுகளில் வெளியாகி விட்டது.

மேலும், இது எனக்கு வருத்தம் தரவில்லை. இதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். அந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு நிர்வாண காட்சிகள் தேவை என்பது எனக்கு தெரியும். ஆனால் ஊடகங்கள் அதைப் பேசியவிதம் தான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments