பேரறிவாளனை தாக்கிய கைதி வேறு சிறைக்கு மாற்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
308Shares

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரளிவாளனை தாக்கியை கைதி வேலூர் சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி பேரறிவாளனுடன் ஏற்பட்ட தகராறில் அவரை இரும்புக் கம்பியால் ராஜேஷ் கண்ணா தாக்கினார்.

இதில் பேரறிவாளனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு பதற்றமடைந்த ராஜேஷ் கண்ணா ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு மயக்கமடைந்தார்.

சிறை மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, சம்பவம் தொடர்பாக இருவரிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ராஜேஷ் கண்ணாவ கடலூர் மத்திய சிறைக்கும், இவருக்க உதவி செய்த செல்வம் என்ற நபரை சேலம் சிறைக்கும் பலத்த பாதுகாப்புடன் மாற்றியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments