திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்தில் சிக்கிய பச்சிளங் குழந்தை பரிதாப பலி!

Report Print Arbin Arbin in இந்தியா
211Shares

கர்நாடக மாநிலத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்று திடீரென தீபிடித்ததில் 3 வயது சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்தான். படுகாயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி பேருந்து நிறுவனத்திற்கு சொந்தமான குளிர்சாதன பயணிகள் பேருந்து ஒன்று 36 பயணிகளுடன் ஷீரடியில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹுமனாபாத் நகருக்கு பேருந்து வந்தபோது, பேருந்தில் ஏற்பட்ட குறைந்த மின்னழுத்தத்தால் பேருந்து தீடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை கவனித்த பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அதிகாலை என்பதால், பயணிகள் நீண்ட உறக்கத்தில் இருந்துள்ளனர். பேருந்து தீப்பிடித்ததில் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அப்பகுதி மக்கள், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும், மூன்று பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments