25 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்தாருடன் இணைந்த நபர்: நடந்தது என்ன?

Report Print Arbin Arbin in இந்தியா

சுய நினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் ஒருவர் பெங்களூரு பொலிசாரின் முயற்சியால் அவரது குடுமபத்தாருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பொலிசார் ஹனுமந்த நகர் பகுதியில் இருந்து சுய நினைவை இழந்த நிலையில் ஒருவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த தகவல்கள் தெரியவரும் நபர்கள் தொடர்பு கொள்ளலாம் என தங்களது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டுருந்தனர்.

அடுத்த சில நாட்களில் பெங்களூருவில் மென்பொறியாளராக இருந்து வரும் நபர் ஒருவருக்கு இச்செய்தி வாட்ஸ்அப் மூலம் கிடைக்கப்பெற்றது. அந்த புகைப்படத்தை பார்த்த நபர் உடனடியாக தமது நண்பர் ஒருவருடன் ஹனுமந்த நகர் பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்கள் ஜயராமா என்ற அந்த நபரை அனுமதித்துள்ள மருத்துவமனையில் இவர்களை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அடையாளம் கண்ட குறிப்பிட்ட மென்பொறியாளர் உடனடியாக அவரது மூத்த சகோதரருக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

ஜயராமா காசரகோடு தாலூக்கில் உள்ள புல்லரிகட்டே கிராமத்தில் துணி தைத்து பிழைப்பு நடந்தி வந்துள்ளார். இவரை அடையாளம் காட்டிய நபருக்கு முதன் முறையாக பேண்ட் தைத்து தந்தவரும் ஜயராமா என்பதால் அவரை பார்த்ததும் நினைவு வந்ததாக கூறியுள்ளார் கம்பர் என்ற அந்த 45 வயது நபர்.

குடும்ப பிரச்னை காரணமாக கிராமத்தில் இருந்து தலைமறைவான ஜயராமா பின்னர் திரும்பி வரவே இல்லை என்றும், குடும்பத்தினர் சில நாட்கள் தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், பின்னர் அவர்கள் தேடுவதையே நிறுத்தியதாகவும் கம்பர் தெரிவித்துள்ளார்.

தற்போது நீண்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை குடுமபத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர் அவரது கிராமத்து நபர்கள் இருவர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments